Read Aloud the Text Content
This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.
Text Content or SSML code:
சமர்ப்பணம் நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் தங்களது சொந்த தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தைத் தொடங்கி இருக்கும், லட்சக்கணக்கான தனிநபர்கள், தம்பதியர் மற்றும் குடும்பங்களுக்கு நாங்கள் இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறோம். நாங்கள் எங்களது வாழ்க்கையை, பொருளாதாரச் சுதந்திரம் அடைவது எப்படி என மக்களுக்குக் கற்பிப்பதற்கு அர்ப்பணித்திருக்கும் அதே வேளையில், மற்றவர்கள் தங்களது சொந்த வியாபாரத்தைத் தொடங்கவும் கட்டியெழுப்பவும் அர்ப்பணித்திருக்கிற ஒரு துறையுடன் இணைந்து செயல்படுவது பெரிதும் திருப்தியளிப்பதாயிருக்கிறது. தினமும் நீங்கள் உங்களது தொழில் வாய்ப்பு குறித்து, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை அயலார்கள், மற்றும் உடன் பணிபுரிபவர்களோடு மட்டுமல்லாது, முன்பின் தெரியாத அந்நியர்களோடும் பகிர்ந்து கொள்கிறீர்கள், அவர்களுக்கு கற்பிக்கிறீர்கள். இதற்காக, நாங்கள் உங்களுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்துகிறோம். நீங்கள், உங்களது சொந்த வியாபாரத்தைக் கொண்டிருப்பதன் சுதந்திரங்களையும் அனுகூலங்களையும் அனுபவித்துக் கொண்டும் நேரடியாகப் பார்த்துக்கொண்டும் இருக்கிறீர்கள். சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் எங்களது நூல்களான 'ரிச் டாட் புவர் டாட்', 'ரிச் டாட் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட்' இரண்டும் விளக்குவது போல், பணம் எப்படிச் செயல்படுகிறது என்பதையும், வளமான செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கிய வழிகள் எவை என்பதையும் ஒருவர் அறிந்து கொண்டால், நெட்வொர்க்கிங் மார்க்கெட்டிங் தொழிலே பெரும்பாலோருக்கு சரியான தொழிலாக இருக்கும் என்பதைக் காண்பது எளிது.