Download Free Audio of 🔥ஜெய் ஜான்சி🏆 தெ�... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

🔥ஜெய் ஜான்சி🏆 தெரியமடி! இஃதொன்றும் அவ்வளவு எளிதல்ல! மண்ணை முட்டி வெளிவரும் விதையாய் போராடித்தான் பெற்றெடுத்தாய் நீ அவளை! பிறைகளாய்த் தேய்ந்தாலும் பௌர்ணமியாய் ஒளிவிடும் வெண்ணிலவாய்... குறையொன்றும் காணாமல் உன் குலமகளை வளர்த்த பெண்ணிலவு நீ! துணையென்று ஒருவரும் உடன்வாராப் போர்க்களத்தில் தனியொருவளாய் துணிவோடு நீ பயணித்த கதையை நானறிவேன் ஆருயிரே! மலைமுகடோ மரக்கொம்போ கல்பாறையோ முள்வேலியோ கட்டிடும் கூட்டைக் கண்ணெனக் காத்திடும் ராணி தேனி நீ! அன்புமகளுக்கு அரணென நின்று காக்கும் ஜான்சி ராணி நீ! பட்டினி ராத்திரிகளிலும் பத்தினியாய் இருந்தவளே! வலிக்கும் பாதங்களை வைத்துக்கொண்டே கொடிய காடுகள் பல கடந்து வந்தவளே! போலிச் சிரிப்பு! நயவஞ்சக நட்பு! சுயநல உறவு! மனசாட்சி தொலைத்த மனிதர்கள்! எல்லோரையும் சமாளித்து வர எப்படி முடிந்ததோ உன்னால்? எவரோடும் உன்னை ஒப்பிட முடியவில்லை என்னால்! பணம் நகை வசதிமீது பற்று வைத்திருந்தால் சொத்து சுகமென சொகுசாய் நீ வாழ்ந்திருப்பாய்! உண்மையான அன்பிற்கும் உன்னதமான ஆதரவுக்கும் ஏங்கி நீ தவிப்பதாலேயே இரக்கமற்ற மனித மிருகங்களின் கண்களுக்கு அற்பப் பொருளாய்த் தெரிகின்றாய்! ஏய் பீனிக்ஸ் பறவையே! வலிகளைக் தாங்கித் தாங்கியே வலிமை பெற்றவளே! உன் மகள் சூடும் மகுடங்களுக்குப் பின்னால் உன் மனம் மறக்காத காயங்கள் உள்ளது! அவள் ஓடித் தொடும் ஒவ்வொரு இலக்கிலும் ஓயாத உன் முயற்சி ஒளிந்து கொண்டுள்ளது! எந்த நிலை வந்தபோதும் இந்த நம்பிக்கை ஒன்று போதும்! ஏளனமாய்ப் பார்த்துச் சிரித்தவர்களின் வாய்கள் இனி அடைத்துப் போகும்! தடைகளை உடைத்தெறி! உன் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் உறவுகளைத் துடைத்தெறி! எப்படி முடியும் என்று கேட்டவர்கள் - இவளால் எப்படி முடிந்தது என்று கேட்குமளவிற்கு வாழ்ந்து காட்டு! நீல வானத்தின் விண்மீன்களெல்லாம் உன் வெற்றிவிழாவிற்காக விழித்திருக்கிருக்கின்றன! ஆரத்தழுவி அன்புமுத்தங்களைப் பரிசளித்துக் கொண்டாட நீண்ட பயணம் முடித்துத் திரும்பும் உனக்காக... நானும் காத்திருக்கிறேன்! 🫂♥️🕊️✨