Download Free Audio of புரட்சிக் கவிஞர் ப... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்து பெருமைப்பெற்ற தமிழ்க் கவிஞராகத் திகழ்ந்தவர். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை மாற்றி பாரதிதாசன் என்று சூட்டிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். குயில் என்னும் கவிதை வடிவிலான இதழினை நடத்தினார் .அவரது வியர்வைக் கடல் கவிதை நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. அதிகாலை: காலை வேளையில் சூரியன் உதயமாவதற்கு முன்பாக வெளியில் கிளம்பினேன். மென்மையான ஒளியை சூரியக் கதிர்கள் பரப்பிக் கொண்டி ருக்கும் சூழலில் மென்மையான குளிர்ச்சி அமைதியான சூழல் இவை யாவும் என் இதயத்தைத் துள்ளி எழும் ஒரு மான் குட்டியைப் போல உற்சாகம் கொள்ளச் செய்தது. இயற்கை: ஒரு அழகான சிறிய மலை இருந்தது. அந்த சிறிய மலையின் அருகில் ஒரு அழகான குளம் இருந்தது. அதன் அருகிலேயே குளிர்ச்சி பொருந்தியதும் வாசனைகளைத் தரக்கூடியதுமான அழகான பூஞ்சோலை இருந்தது .அதே இடத்திற்கு அருகில் தான் எனக்குச் சொந்தமான நன் செய் நிலமும் உள்ளது. பகல்: கடலின் மீது எழுந்த கதிரவனின் நீண்ட கதிர்கள் வானம் முழுவதும் ஒளியைப் பரப்பி விரித்தது .அதன் காரணமாக இந்த உலகத்தில் படர்ந்தி ருந்த இருள் முழுவதும் அகன்றது .நாம் வாழும் பூமி ஒரு அழகான ஓவியம் போல சிறப்பாகத் திகழ்ந்தது. இத்தகைய இயற்கை அழகைக் கண்டு ரசித்த வாரே நான் பகல் பொழுதில் நடந்தேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. வயல்: இயற்கை அன்னை அணிந்திருக்கும் மிகப்பெரிய பச்சைப் பட்டாடைகள் தான் வயல்கள். இந்த உலக மக்களின் பசியைப் போக்குவதற்காகப் பசுமையோடு செழித்து வளர்ந்திருக்கும் பசுமையான பயிர்கள் காண்பதற்கு மரகதம் குவிந்திருந்தவாறு அழகாகத் திகழ்ந்தது. இந்த மரகதக் குவியல் மேல் பனித்துளிகள் படர்ந்திருந்தது நம்முடைய கண்களைக் கூசுகிற வைரம் போல் திகழ்ந்தது .பரந்து விரிந்திருக்கிற என் வயல்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் மனதில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றையும் நான் கண்டதில்லை. உழைப்பு: வயலில் பயிர்களுக்கு இடையில் வளர்ந்திருந்த களைகளை அகற்றுவதற்காகப் பண்ணையாட்கள் நிறையப் பேர் வந்து என்னை வணங்கி விட்டு வயலில் இறங்கினார்கள். தங்களுடைய உடலை வில்லைப் போல் வளைத்து தங்களுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும் செலுத்தி அவர்கள் களைகளை அகற்றினர். நடுப்பகல்: காலை வேலையில் மென்மையாக உதயமான சூரியன் நடுபகலில் கொடுமையான வெப்பத்தைக் கொட்டியவாரே சுட்டெரிக்கத் தொடங்கினான். வயல்களில் ஏர் பூட்டி உழவுத் தொழில் செய்து கொண்டிருந்த உழவர்களின் தோள்களை உரித்து மிகவும் துன்பத்தை ஏற்படுத்தினான். நானோ புதிய மலர்ச்சோலைகளில் ஓய்வெடுக்கத் தொடங்கினேன். வெயில்: குளிர்ச்சியான நீர் நிலை . அதன் அருகிலேயே நிழல்களைத் தரக்கூடிய நிறைய மரங்கள் நின்று கொண்டிருந்தன. வியர்வையும் புழுக்கமாக இருந்ததால் சற்றே ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணித் தேன் பொருந்திய மலர்கள் நிறைந்து இருக்கக்கூடிய சோலைகள் இருக்கும் இடங்களைக் கடந்து குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன். உச்சி வெயிலாக இருந்ததால் அந்த நீர் கூட மிகவும் வெப்பமாகவே இருந்து என்னைச் சுட்டது. உழைப்புத் துன்பம்: காலை வேளையில் சூரியனின் வெப்பத்தால் குளிர்ச்சியைத் தரக்கூடிய சோலைகளும் சற்றே வெண்மையாகத் தான் திகழ்ந்தன. குளிர்ச்சியைத் தரக்கூடிய நீர் நிலையும் வெப்பத்தோடு காணப்பட்டதை எண்ணினேன். எண்ணும்போது என் கண்ணின் எதிரில் வியர்வையோடும் களைப்போடும் தெரிந்த பண்ணையாட்களைப் பார்த்தேன். அந்த சோர்வோடும் அவர்கள் என்னை வணங்கியதையும் கண்டேன் .என்னுடைய நெஞ்சம் தாங்க முடியாத துன்பத்தைச் சந்தித்தது. என்னால் அதனை விவரிக்கவே இயலவில்லை. வியர்வைக் கடலின் காட்சி: வயலில் உள்ள பயிர்களுக்கு இடையில் வளரும் கலைகளை அகற்றும் தொழிலாளர்களின் உடலைக் கசக்கி உருவான வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் இவ்வுலகம் உழைப்பவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை நான் அறிந்து கொண்டேன். முடிவுரை: புரட்சிக்கவிஞர் உழைக்கும் தொழிலாளர்களுக்காக வியர்வைக் கடல் என்ற கவிதையைப் படைத்து அதன் வாயிலாக உழைப்பாளர்களைப் போற்றியதை அறிகிறோம்.